மாணவர்கள் பாத பூஜை செய்து பெற்றோரின் வாழ்த்துகளைப் பெற்றனர்

February 01, 2019

மாணவர்கள் பாத பூஜை செய்து பெற்றோரின் வாழ்த்துகளைப் பெற்றனர்

மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளியில் பயிலும் சுமார் 1000 மாணவர்கள் தம் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த நிகழ்ச்சி 01.02.2019 வெள்ளிக்கிழமை அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பெற்றோர்களை அமர வைத்து மாணவர்கள் அவர்களுக்கு பாத பூஜை செய்து பெற்றோரின் வாழ்த்துகளைப் பெற்றனர். இந்நிகழ்ச்சியானது கரூர் விவேகானந்தா சாரதா கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி சாரதானந்தா அவர்களால் தொகுத்து நெறிபடுத்தப்பட்டது. முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடபெருமாள் வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன செயலர் ஶ்ரீமத் சுவாமி சத்யானந்தர் மற்றும் ஶ்ரீமத் சுவாமி அபேதானந்தர், ஶ்ரீமத் சுவாமி சச்சிதானந்தா ஆகியோர் பங்கு பெற்றனர் மதுராந்தகம் மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு முரளி புதுச்சேரி இன்டக்ரா சாப்ட்வேர் மேலாண்மை இயக்குநரும் இந்து மேல்நிலைப்பள்ளிக்குழு துணைத்தலைவருமான ஶ்ரீராம்சுப்ரமண்யா இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார், இந்து மேல்நிலைப்பள்ளிக் குழு செயலர் சுப்பரமணியன், இன்டக்ரா ஊழியர் அமுதா மற்றும் ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.